dmk famous former minister Joins AIADMK திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் முன்னால் துணை பொது செயலாளரும் மான பருதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார். திமுகவின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்த பருதி அவர்கள் சற்று நாட்களாக திமுகவின் அனைத்து கூட்டம் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். இன்று திடிரென்று அவர் முதல்வர் ஜெ வை சந்தித்து அதிமுக வில் அவரை இணைத்துக் கொண்டார். பருதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அவர் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்…
Read Moreஇந்திய சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்
Road accident in india. tamilnadu in Top Position. இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறும் பகுதியாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது. கடந்த வருடம் தமிழ் நாட்டில் 67 ஆயிரத்து 757 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 16 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமான பிரதான சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அளவுக்கு அதிகமான வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வாகன ஓட்டிகளுக்கு முறையான பயிற்சியின்மை, உள்ளிட்டவை விபத்துக்களுக்கான பிரதான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இதேவேளை பாதுகாப்பான முறையில் சாலை கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளே இல்லை என்ற நிலை மாறி இன்று 100அடி 200அடி சாலைகள் வந்த பிறகு அதை பொதுமக்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் உபயோகம் செய்யாமல் அதி வேக பயணம் செய்வதாலும் சாலை விதிகளை சரிவர பின்பற்றததுமே காரணம் என தெரிவிக்கின்றனர் Road accident in india. tamilnadu in Top Position.
Read Moreமாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி
admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில் அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…
Read Moreதங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!
gold price dips in tamilnadu வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய…
Read Moreதமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.
பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai
Read Moreபள்ளி வேன் கவிழ்ந்து ஒரு மாணவர் பலி, 7 மாணவர்கள் படுகாயம்
அதிகாலை இன்று (26.6.13) பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவர்கள் படுகாயம் ஒரு மாணவர் பலியானார் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்லாவரம் அருகே தனியார் பள்ளி வேல்ஸ் வித்யாஷ்ரம் வேன் கவிழ்து 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் ஆனால் 9ம் வகுப்பு மாணவரான தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். pallavarm school bus accident. student deth
Read Moreஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்
Edward Snowden பெய்ஜிங்: அமெரிக்காவின் தேச துரோகியாக கருதப்படும் எட்வர்ட் ஸ்நொவ்டெனனுக்கு அடைகலம் கொடுக்கவேண்டாம் என நேற்று அமெரிக்கா கேட்டுகொண்டிருந்த நிலையில், சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தொலைகாட்சியில் அவரை சிறந்த சிந்தனையாளர் என்றும் புரட்சியாளராகவும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் சுமுகமான உறவு நிலைக்கவேண்டுமெனில் ஸ்நொவ்டெனுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் எனவும், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு சீனாவை அமெரிக்க வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே… China’s state newspaper praises Edward Snowden for ‘tearing off Washington’s sanctimonious mask’ Edward Snowden
Read Moreதமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.
tamilnadu government enterprises ready to buy NLC shares நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) 5 சதவீத பங்குகளை விற்பது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பேச்சுகள் இருந்தன. அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன். இந்த நிலையில், என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த மே 23-ஆம் தேதி தங்களுக்கு கடிதம்…
Read Moreகவியரசன் கண்ணதாசன் 87வது பிறந்தநாள்
Tamil poet kannadasan birthday இன்று உலக தமிழர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த வித்தக கவிஞன் கவியரசன் கண்ணதாசன் அவர்களின் 87வது பிறந்தநாள் கண்ணதாசன் ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருதுபெற்றவர். தமிழ் வார்த்தைகளால் சொற்களை கவிதை நயத்தில் கையாண்டு கவிதையாய் கொடுத்து தமிழ் மக்கள் மனதில் இன்றும் கடவுளாய் உலா வருபவர் கவிஅரசன் கண்ணதாசன், எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு தனித் தனியே வரிகள் அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இருவரும் தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க கண்ணதாசனும்…
Read Moreகிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை
india wins Cricket Mini world cup மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் பொட்டில் இந்திய அபார ஆட்டத்தினால் இங்கிலாந்தை 5ரன் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் ஆனது. 2002-ல் இலங்கையுடன் மினி உலகக் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, முதல்முறையாக தனித்து கோப்பையை வென்றுள்ளது. பர்மிங்காம்மில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்தியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கை பற்றியது, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிர்ப்பகல் 3.00 மணி அளவில் தொடங்குவதாக இருந்தது மழையின் காரணமாக நேரம் மற்றும் ஆட்ட நேரமும் குறைக்கப்பட்டது .டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பட்டிங் செய்ய அழைத்தது. மழையின் காரணமாக ஆட்டம் துவங்குமா என்ற கேள்விக்குறி ஆனது. 5மணி நேரம் கழித்து ஆட்டம் துவங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ரசிகர்களும்…
Read More



