Medicinal tips of cloves கிராம்பின் மகிமை கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு . இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.கிராம்பு பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி…
Read Moreவைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்
மதுரையில் இருந்து தினமும் காலை 6.55 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம் போல் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் காலை 8.55 மணிக்கு திருச்சி வந்து 9 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு சென்னையில் உள்ள ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘திருச்சியில் இருந்து பேசுகிறேன். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. 9 மணிக்கு வெடிக்கும்’ என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இச்செய்தி உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 8.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்ததுஉடனடியாக அனைத்து பயணிகளையும் கீழே இறங்கும்படி போலீசார் கூறினர். இதற்கிடையே பயணிகளுக்கு வெடிகுண்டு பற்றிய தகவல் தெரியவந்தது.…
Read Moreஇந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவு
India, including the embassies of 38 countries watched the shocking secret U.S. intelligence have been reported. அமெரிக்கா: வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் உளவு பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய எட்வர்டு ஸ்நோடென், தன் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பின் அத்துமீறல் உளவு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் கடந்த மாதம் ஹாங்காங்குக்கு தப்பி வந்தார். அங்கு அந்த ஆவணங்களை உலகுக்கு வெளியிட்டார். இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், ஹாங்காங்கில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அவர், ஈகுவடார் நாட்டிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது ரகசியமாக உள்ளது. சீனாவை, அமெரிக்கா உளவு…
Read Moreதொழில் துவங்க முன் வருவோர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்
புதுக்கோட்டை: “”புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் வரை மானியமும், வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்,” என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் மனோகரன் பேசியதாவது:படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு(2012-13) முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பதோடு, தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கான திட்ட மதிப்பீடு, அரசு மானியம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக்கொடுக்கப்படும்.குறைந்தபட்சம் 5…
Read Moreவிஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்
arrest warrant for Vijayakanth திங்கள், 1 ஜூலை 2013: சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அரசு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட்…
Read Moreவேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை
velliappan murdered in vellore திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 : வேலூர் : இந்துமுன்னணி மாநிலச் செயலாளர் சு.வெள்ளையப்பன் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார். இன்று மதியம் 3.15 மணியளவில் வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையன் இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்த்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன…
Read Moreஎய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்
AIDS HIV ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது. ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும். ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய…
Read More"தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்
EC issues show cause notice to Gopinath Munde இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார். வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த…
Read Moreஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு விமான நிலையம்:பிரதமர் முடிவு!
Green Field airport Sriperumbudur புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், கிரீன்பீல்டு விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் – அரசுத் துறை பங்களிப்புடன், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆறு மாதங்களில், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அரசு – தனியார் பங்களிப்புடன், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.…
Read Moreதமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
Major reshuffle of IAS officers in tamilnadu சென்னை: தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை தவிர திருவண்ணாமலை, தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு கிளம்பிய சற்று நேரத்தில் இந்த உத்தரவுகள் நேற்று வெளியாயின. இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார். மாற்றப்பட்ட அதிகாரிகள் முழு விவரம் : பி.டபிள்யூ.சி.டேவிதார்: புதிய பதவி: பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர். முந்தைய பதவி: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். ஹர்மந்தர் சிங்: புதிய பதவி: கைத்திறன், ஜவுளி மற்றும் காதித் துறை முதன்மைச் செயலாளர் முந்தைய பதவி: தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர். எஸ்.கிருஷ்ணன் புதிய பதவி: திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் நிதித் துறை செயலாளர்- செலவினம். டி.உதயசந்திரன்…
Read More



