Medicinal tips of cloves
கிராம்பின் மகிமை
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு . இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.கிராம்பு பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும் .
திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும். துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும். சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும். கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
Medicinal tips of cloves
இதையும் படியுங்கள்
- வெயில்நோய்களில் இருந்தும் தப்பிக்க பூசணிக்காய் அவல் சாலட்
- ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேரிலிருந்து கிடைக்கும், சத்துக்கள் நிறைந்த மிக முக்கியமான காய்கறி : பீட்ரூட்
- பப்பாளி பழத்தின் மகிமை
- மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…
- கொரோனாவில் கொள்ளையடிக்கும் தில்லாலங்கடி திருட்டு அதிகாரிகள்!
- ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்
← முந்தைய செய்தி: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்
அடுத்த செய்தி →: விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் காலமானார்
