specialty of lemon as food and medicine
Glory of lemon

எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் தினமும் பருகுவது தான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத தொந்தரவில்லாத சுவையான சிகிச்சை.இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இது பற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி லித்தோட்ரிஸ்பி (lithotripsy) பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர். இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.
specialty of lemon as food and medicine
இதையும் படியுங்கள்
- மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரே
- காற்றாலை இறக்கை கிழித்ததில் சிறுமி உள்பட 5 பெண்கள் பலி
- இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!
அடுத்த செய்தி →: மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரே
