Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today
இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் 10 இலங்கை தமிழ் அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
2 குடும்பங்களை சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ”இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர்.
மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்” என்றனர்.