New photos of Chennai bomb blasts victim Swathi show bullet wound on her chest.
சென்னை குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்ற காயம் உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி பலியானார், மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடம் மற்றும் பலியான ஸ்வாதியின் புகைப்படங்கள் அன்றே வெளியிடப்பட்டன. அதில் காயம் அடைந்த ஸ்வாதியின் முகம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்வாதியின் புதிய படங்கள் மற்றும் சம்பவ இடத்தின் படங்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய படங்களில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்று உள்ளது. மேலும் குண்டு வெடித்த ரயில் பெட்டியில் பொருட்கள் சிதறிக் கிடக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.