இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!

India’s Chandrayaan-1 helps NASA find water on moon

India's Chandrayaan-1 helps NASA find water on moon

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள், தகவல்களை “நாசா’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சந்திரயான் -1 அனுப்பிய தடயங்களை ஆராய்ந்து வந்த நாசா, தற்போது நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்காக சாத்தியங்களை உறுதி செய்துள்ளது. இதற்கு முன், 2009ம் ஆண்டு, நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதாக, நாசா கூறியது. எனினும், நீர் படிமங்களாக இருப்பதாகவும், சூரியப் புயல் ஏற்பட்ட போது, நீர் மூலக்கூறுகள் உருவாகி, பின் படிமங்களாக மாறியதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது, ஆய்வாளர்கள் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சியின் படி, சூரியப் புயலால், நீர் மூலக்கூறுகள் உருவாகியிருக்க வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளதாம். நிலாவின், சுற்று வட்டப்பாதை மற்றும் அதன் மேற்பரப்பில் மேற்கொண்ட ஆய்வில், நிலாவிலிருந்து சில துகள்கள் சேகரிக்கப்பட்டன. அந்த துகள்களை ஆய்விற்கு உட்படுத்தியதில், அதில், “ஹைட்ராக்சில்’ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு “ஆக்சிஜன்’ அணுவும், ஒரு “ஹைட்ரஜன்’ அணுவும் இணைந்ததே, “ஹைட்ராக்சில்’ எனப்படுகிறது. இதன் மூலம், நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நிலாவின் மேற்பரப்பை ஆழமாக ஆராய்ந்த சந்திரயான் – 1 சில முக்கிய தகவல்களை பூமிக்கு அனுப்பியது. அதில், ஒரு காலத்தில் நிலாவில் நீர் இருந்ததும், தற்போது, படிம நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் அனுப்பிய தகவல்களின் மூலம், நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு நிலவும் தட்ப வெட்ப நிலைக்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, நிலா உருவான விதம், அதில் நிலவும் குறைந்த ஈர்ப்பு விசைக்கான காரணம், அதன் ஆயுள் காலம் போன்ற தகவல்களை அறியும் முயற்சியில், “நாசா’ ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

India’s Chandrayaan-1 helps NASA find water on moon

 

Using data from instruments aboard India’s Chandrayaan-1 spacecraft, scientists have found evidence of water locked in mineral grains on the surface of the moon from an unknown source deep beneath the surface.

Using US space agency NASA’s Moon Mineralogy Mapper (M3) instrument on the Indian Space Research Organisation’s (ISRO) spacecraft, scientists remotely detected magmatic water, or water that originates from deep within the moon’s interior, on the surface of the moon.

The findings of the National Aeronautics and Space Administration (NASA) funded research, published in Nature Geoscience, represent the first detection of this form of water from lunar orbit, the agency said.

Earlier studies had shown the existence of magmatic water in lunar samples returned during the Apollo programme, NASA said in a media release.

M3 imaged the lunar impact crater Bullialdus, which lies near the lunar equator. Its central peak is made up of a type of rock that forms deep within the lunar crust and mantle when magma is trapped underground.

“This rock, which normally resides deep beneath the surface, was excavated from the lunar depths by the impact that formed Bullialdus crater,” said Rachel Klima, a planetary geologist at the Johns Hopkins University Applied Physics Laboratory (APL) in Laurel, Maryland.

“Compared to its surroundings, we found that the central portion of this crater contains a significant amount of hydroxyl — a molecule consisting of one oxygen atom and one hydrogen atom — which is evidence that the rocks in this crater contain water that originated beneath the lunar surface,” Klima said.

In 2009, M3 provided the first mineralogical map of the lunar surface and discovered water molecules in the polar regions of the moon.

This water is thought to be a thin layer formed from solar wind hitting the moon’s surface. Bullialdus crater is in a region with an unfavourable environment for solar wind to produce significant amounts of water on the surface.

The detection of internal water from orbit means scientists can begin to test some of the findings from sample studies in a broader context, including in regions that are far from where the Apollo sites are clustered on the near side of the moon, NASA said.

For many years, researchers believed that the rocks from the moon were bone-dry and any water detected in the Apollo samples had to be contamination from Earth, it said.

Related posts