AIDS HIV
ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது.
ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும்.
ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய மருத்துவமுறை அமையும் என உலக சுகாதாரக் கழகம் நம்புகிறது. மலேசியாவில் ஆரம்பிக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்த புதிய மருத்துவ முறைக்கான பிரச்சாரம் ஆரம்பிக்கும்.
AIDS HIV
இதையும் படியுங்கள்
- வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை
- விஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்
- "தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: "தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்
அடுத்த செய்தி →: வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை
