37 dead after fire at Russian psychiatric hospital
ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 37 பேர் பலியாகினர். ரஷ்யாவின் நோவ்கோரோட் மாகாணத்தில் லூகா என்ற ஊரில் மனநோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு 60-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அது பயங்கரமாக எரிந்து அடியோடு தரைமட்டமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் மருத்துவ ஊழியர் ஒருவர் ஆவார். மேலும் 27 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. ரஷ்யாவில் இதுபோன்ற மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டில் நடைபெற்ற 4-வது பெரிய விபத்து இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ராமென்ஸ்கை என்ற இடத்திலுள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 2 நர்சுகள் உள்பட 38 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 dead after fire at Russian psychiatric hospital
A fire early on Friday in a psychiatric hospital in northwestern Russia killed 37 people, including a nurse who was trying to save patients, local investigators said. The raging blaze that began at about 2:30 a.m. destroyed the 19th-century, one-story wooden hospital in the town of Luka-Oksochi, about 350 miles northwest of Moscow in the Novgorod region, officials said. At least 20 people were rescued from the burning building, and by Friday afternoon the authorities said they had recovered 10 bodies. Local news agencies reported that the building may not have met current safety standards and that it had been scheduled to close, with patients to be transferred to other institutions by the end of the year. The fire apparently started in the bed of a patient, officials said. But the director of the hospital, Hussein Magomedov, told the Interfax news agency that the fire appeared to have been deliberately set. Photos from the scene initially showed a fierce orange blaze and heavy, billowing smoke and later the charred ruins of the building. The Russian Emergency Affairs Ministry said more than 400 firefighters and other personnel were brought in to fight the blaze. In April, 38 people were killed in a fire in a psychiatric hospital just north of Moscow. Fires in state-run institutions, often in poorly maintained buildings, have been a persistent problem in Russia.