Kidnapped business man rescued
சென்னை ஐஸ்அவுஸ் கபூர்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவரது மகன் யாசர்அராபத் (வயது 25). இவர், பல்லாவரத்தில் தோல் கம்பெனி நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தார். அப்போது, 3 மர்ம நபர்கள் இவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்தார். மற்ற இருவர் சாதாரண உடையில் காணப்பட்டனர்.
இந்த மர்ம நபர்கள், வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அராபத்தை காரில் அழைத்துச் சென்றனர். ஆனால் எந்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அராபத் வீட்டிற்கு அன்றையதினம் நள்ளிரவே போனில் பேசிய நபர் ஒருவர், அராபத்தை கடத்தி சிறை வைத்துள்ளோம் என்றும், ரூ.1 கோடி பணம் கொடுத்தால், அவரை உயிரோடு விடுவோம் என்றும், போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என்றும் மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். வியாழக்கிழமை இரவுவரை அராபத் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்-அவுஸ் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
கடத்தப்பட்ட யாசர் அராபத்தை மீட்க, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் லட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் தளவாய்சாமி, மோகன்தாஸ், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர். கடத்திச்செல்லப்பட்ட அராபத்தின் செல்போனை கண்காணித்து, போலீசார் அவர் சிறை வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர். சென்னை வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில் சினிமா அதிபர் ஒருவரது வீட்டில் அராபத் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று அதிகாலையில் தனிப்படை போலீசார், அந்த வீட்டை முற்றுகையிட்டனர். சிறை வைக்கப்பட்ட அராபத் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை கடத்திய கும்பலைச் சேர்ந்த 8 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் தொடர்பாக, கடத்தல் தலைவன் சுலைமான் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் தொழில் செய்து வருகிறேன். சமீபத்தில் சிலரை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். அவர்களில் இருவரை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய போலீசார் பிடித்துவிட்டனர். அவர்களை வழக்கில் இருந்து எப்படியாவது விடுவிக்க நான் முயற்சித்து வந்தேன். அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாக, யாசர் அராபத்தின் தந்தை தமீம்அன்சாரி கூறினார். அதற்காக ரூ.17 லட்சம் பணமும் பெற்றுக்கொண்டார்.
ஆனால், விடுவிக்காமல் ஏமாற்றிவிட்டார். ரூ.17 லட்சம் பணத்தையும் திருப்பித்தரவில்லை. மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எனது ஆட்களை மாட்டிவிட்டதே தமீம்அன்சாரியாக இருக்குமோ, என்று நான் சந்தேகப்பட்டேன். இதனால் பதிலடி கொடுக்கும் வகையில், தமீம்அன்சாரியை கடத்திச்சென்று, பணம் பறிக்க திட்டம் வகுத்தோம். ஆனால் தமீம்அன்சாரி வெளியில் சென்று விட்டதால், அவரது மகனை கடத்தி வந்துவிட்டோம். இவ்வாறு சுலைமான் தனது வாக்குமூலத்தில் கூறியதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Kidnapped business man rescued
The city police arrested eight persons on Friday in connection with the abduction of a young tannery owner by men in police uniform from Triplicane. Police sources said the special team rescued Yasar Arafat, 24, by arresting eight suspects while they were collecting ransom from the wife of the kidnapped man at Vadapalani on Thursday night.
“The abductors gang was headed by Sulaiman of Mannadi, a relative of Arafat. Sulaiman used abduction as a tool to get back some outstanding sum from Arafat’s father,” said K. Shankar, joint commissioner of police, (east), on Friday.
Arafat was kidnapped by four men posing as police officials on Wednesday night. The kidnappers demanded a ransom Rs 15 lakh from Arafat’s wife Yasin Banu. Based on Banu’s complaint, a police team swung into action and rescued Arafat.
As per instructions from the abductors, Banu carried the first installment Rs 5 lakh to a place near Vadapalani. As she handed over the money to the kidnapper, police personnel in plainclothes noted his details and followed to nab him along with other accused and rescued the tannery owner, kept in captivity in a house in Virugambakkam.
Preliminary inquiries revealed that Arafat’s father Thameem Ansari promised Sulaiman that he would facilitate the release of two people, identified as Shanmugam and Saddique arrested by the Kuala Lumpur police for smuggling narcotics to Malaysia. Ansari had collected Rs 15 lakh from the relatives of those detained in Malaysia to get them bail through a court in Malaysia. However, Ansari failed to get them out. The two were awarded severe punishment by the Malaysia court recently. The angry relatives asked Ansari to return the money but the had been dodging them without returning the amount. So, they decided to kidnap Ansari. “But when they reached Ansari’s house, only his son was there. They took him to extort money from Ansari,” the police said.