நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு

High voltage electricity to consumers using electrosection Time Reduction

தமிழகத்தில் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரம் தவிர மற்ற நேரங்களில் இன்று முதல் மின்வெட்டு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.

மாலை 6 மணி முதல் 10 மணி வரை தற்போதுள்ள 90 சதவிகித மின்வெட்டு 40 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதி வரை இது அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு மின்இருப்பைக் கருத்தில் கொண்டு மின்வெட்டு நேரம் தீர்மானிக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது .

 

High voltage electricity to consumers using electrosection Time Reduction

Related posts