தமிழ்நாட்டில் முதன் முறையாக காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை நடைமுறைப்படுத்த மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர்.
காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட ’வாட்டர் மேக்கர்’ இயந்திரம் மூலம் அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது. அதிலும் குழாய் இணைப்பு நீர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, ’திரவமாக்குதல், சேகரித்தல், வடிகட்டுதல் மற்றும் வழங்குதல்,’ பணிகளை அந்த இயந்திரமே செய்து முடிக்கும்.
அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில் ’வாட்டர் மேக்கர்’ இயந்திரத்தின் செயல்பாடு அபரிதமாக இருக்கும்.
சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியல் முதல் 32 டிகிரி செல்ஷியசிலும் ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில் திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும்.
மேலும் வெப்பநிலையை 8 முதல், 13 டிகிரி செல்ஷியஸ் வரை பராமரிக்கும்.
120ல் துவங்கி 5,000 லிட்டர் வரை நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் அளவிற்கு இயந்திரங்கள் உள்ளன. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா , அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் மட்டுமே இது மாதிரி ’வாட்டர் மேக்கர்’ இயந்திரம் மூலம் குடிநீர் உற்பத்தி நடக்கிறது.
Create water from air