ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.

14 year old boy dead in Rail accident

மும்பையில் ஒடும் ரயிலில் சிறுவன் ஒருவன் சாகசம் காட்டுகிறேன் என்று நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா14 வயதான இச்சிறுவன் ரயில் பேட்டியின் நுழைவாயிலில் ஒழுங்காக நிற்காமல், ஒரு காலில் மட்டும் தனது உடல் எடையை தாங்கி சாகசம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்கு சரியாக கால்களை மாற்றி ரயிலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோஷின் ரேதி பந்தர் என்னும் இடத்திற்கு அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், பெரும் நகரங்கள் சென்னை மும்பை போன்ற இடங்களில் இளைஞ்சர்கள் இதுபோல சாகசம் செய்கிறோம் என்று உயிரை விடுவது அதிகமாகி வருவதாகவும்,ரயிலில் சாகசம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் மீது தற்கொலைக்கு முயற்சித்ததற்காக வழக்கு தொடரப்படும் என்றும் அவர்கள் கூறினார்.

மேலும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் எந்த விதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களால் இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கபடுவதால் பெற்றோர்கள் கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்செயலாக செல்போனில் படம்பிடிக்கப்பட்டு இணையத்திலும் வெளிவந்துள்ளது

14 year old boy dead in Rail accident

Advertisement:

For Best quality printing inks in india: Visit http://rupainks.com/

Related posts