காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான் நிம்மதியான இல்லற வாழ்க்கை வாழ முடியும் என முன்னாள் காவல் துறை அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார். தமிழக அரசானது காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கின்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஐ.ஜி.சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மூன்று காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் சட்ட வல்லுநர் உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக அமைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்து பி.பி.சியில் கருத்தை பதிவு செய்த முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியான திலகவதி காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். மேலும் காவல் துறை…
Read Moreவானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
பல ஆண்டுகளுக்கு முன்னாள் வானத்தில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று துணைக்கோள்கள் இருக்கும். ஆனால் நாம் வாழும் கிரகமான பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உண்டு. இந்நிலையில் முன்னைய காலங்களில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், அவை ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வு சில மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, 2வது நிலாவை அதனுடன் சுற்றி வந்த முதல் நிலா ஈர்த்துக் கொண்டு விட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின் மேற்பரப்பில் மலை போன்ற…
Read Moreசீனாவில் தாய்ப்பால் விற்பனை
சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன. இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர். தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர். இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு…
Read Moreஇளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்
தர்மபுரி மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் உயிரிழந்த இளவரசன் மரணம் தொடர்பான தகவல்களை மனித உரிமைக் கழகமானது புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது. விவசாய விடுதலை முன்னணி அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு தகவலில், இளவரசன் உடலானது ரயில் தண்டவாளம் அருகே கிடந்துள்ளதால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஒரு ரயிலின் முன்பு ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை பார்த்து வந்த கவுடு என்னும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கின்றார். மேலும்…
Read Moreதிமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ?
கருணாநிதியின் தத்துப்பிள்ளை, மு.க.மணியை கண்டுபிடிக்க நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., அரசின், இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பரிதி இளம்வழுதி கருத்து வெளியிடுகையில், தி.மு.க.,வில் இருப்பது கும்பல், அ.தி.மு.க.,வில் இருப்பது கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும்; கூட்டம் நிலையாக நிற்கும். நானும் நிலையாக உங்களுடன் நிற்பேன். தமிழக அரசியலில், குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் தி.மு.க., வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்தேன், நான் என்ன தவறு செய்தேன். 1991 – 1996ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் செயல்பட்டேன். நான் அப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து இருந்தால், உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும்,…
Read Moreமருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் கட்ஆப் மதிப்பெண் வாங்கிய மாணவி தேஜல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இரண்டாவது இடம் வாங்கிய மாணவி அமிர்தசாய் தனியார் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார் . இன்றைய கலந்தாய்வுக்கு 698 மாணவ , மாணவியர் அழைக்கப்பட்டுள்ளனர்.
Read Moreசிவகாசியில் 100 சவரன் நகை கொள்ளை
விருதுநகர் – சிவகாசியில் அச்சக உரிமையாளர் செந்தில் பாபு வீட்டில் திருட்டு . செந்தில் பாபு திருவனத்தபுரம் சென்று இருந்த பொது இச்சம்பவம் நேரிட்டது. அவர் அடுக்கு மாடி குடிஇருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார் . அவரது வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 40,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
Read Moreசெகந்திராபாதில் இரண்டு அடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்தது-6 பேர் பலி
ஆந்திராவின் -செகந்திராபாதில் இரண்டு அடுக்கு மாடிஹோட்டல் இடிந்து விழுந்தது. சிட்டி லைட் ஹோட்டல் செகந்திராபாதில் உள்ளது . இன்று அதிகாலை இந்த ஹோட்டல் திடீர்ரென இடிந்து விழுந்தது, இதில்ஆறு பேர் பலி . 40க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல். தீயணைப்பு படையினர் சிக்கி இருப்போரை மீட்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்.
Read Moreலோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே
Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir புதுடெல்லி, ஜூலை 6– லஞ்சம், ஊழலை ஒழிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி பிரபல காந்திய வாதி அன்னாஹசாரே கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஊழலுக்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அன்னாஹசாரேக்கு ஆதரவு பெருகியது. ஊழலுக்கு எதிராக மக்கள் அலை, அலையாக திரள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு வேறு வழியில்லாமல் பணிந்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் உறுப்பினர்கள் மற்றும் செயல்படுத்தும் விஷயத்தில் அன்னா ஹசாரேக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து…
Read Moreவிஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் காலமானார்
உலகத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானியும் கணினிக்கான மவுஸ்சை கண்டு பிடித்தவருமான டக்ளர்ஸ் எங்கிள்பாட் தனது 88 வது வயதில் சிறுநீரக கோளாறால் கடந்த செவ்வாய் இரவு காலமானார் . விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் அமெரிக்காவைச் சேர்ந்தவர் . 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார். டக்ளர்ஸ் எங்கிள்பாட்தனது இரண்டாவது மனைவி காறின் ஓ லார்ரியுடன் வாழ்ந்து வந்தார், இவருடைய முதலாவது மனைவி பலாட் 1997 ல் மரணமடைந்தார்.இவருக்கு கார்டா, டயானா, கிறிஸ்டீனா, நோர்மன் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர் . Father of the computer mouse DOUGLAS ENGELBART died
Read More



