இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து 4 வயது சிறுமியை பலி

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom

இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு செல்ல நாய் அந்த வீட்டில் உள்ள 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் எனும் பகுதி அருகில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன். 30 வயதான ஜோடி ஹட்சனுக்கு 4 வயதில் லெக்சி ஹட்சன் என்ற மகள் இருந்தார்.

சில வாரங்களுக்கு முன் இவர்கள் இல்லத்திற்கு ஜோடி ஹட்சனின் கணவர் வளர்ந்த ஒரு பெரிய நாயை கூட்டிகொண்டு வந்தார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் அந்த நாயை பிடுத்துவிட்டதால் அவர்கள் அந்த நாயை வளர்க்க முடிவு செய்தார்கள்.

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom 

அந்த பெரிய நாயை சிறுமி லெக்சி ஹட்சனுக்கு மிகவும் பிடித்து விட்டதால் எப்போதும் அந்த நாயுடன் விளையாடி கொண்டு இருந்து வந்தார். ஒரு சில சமயங்களில் ஜோடி ஹட்சன் அந்த நாயை வெளியே அழைத்து செல்லும்போது கூடவே அந்த சிறுமியும் அவரது தாயுடன் செல்வார். இந்த நிலையில், எப்போதும் போல் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை திடீரென்று அந்த நாய் தாக்கி கடிக்க துவங்கியது. நாயிடம் இருந்து தப்பிக்க முடியாமல் திணறினாள். அந்த வேளையில் மகளை நாய் கடித்து கொல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் ஜோடி ஹட்சன் தன மகளை காப்பாற்றும் நோக்கத்தில் கத்தியால் நாயை குத்தி கொன்றார்.

அதன் பின்னர், சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபரீத நாய்கடி சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர், சிறுமியை அந்த நாய் மிக கொடூரமாக கடித்து குதறியது. அது மிக பெரிய நாயாக இருந்ததால் நாங்கள் எவ்வளவு போராடியும் நாயின் பிடியிலிருந்து குழந்தையை விடுவிக்க முடியவில்லை. அவரது தாய் அதை கத்தியால் குத்தியபின் தான் சிறுமியை மீட்க முடிந்தது. ஆனால், அதற்குள் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது எனக் கூறினார்கள்.

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom

Four-year-old girl dies after being mauled by ‘enormous’ pet dog

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom

Related posts