மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சி

madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s pressure to improve in academics  madurai girl students in standard 7th tried for a suicide after the teacher's pressure to improve in academics

பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பால் மனம் உடைந்த 7ம் வகுப்பு மாணவிகள் 7 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டி. இங்கு, மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் 7 பேர் 7-ம் வகுப்பில் படித்து வருகிறார்கள் இவர்கள் 7 பேரும் நெருங்கிய தோழிகள்.

பள்ளி ஆசிரியர்கள் இவர்களை சரியாக படிப்பது இல்லை என அடிக்கடி கண்டித்து வந்தனர். நேற்று அந்த மாணவிகளை வழக்கம் போல அவர்கள் கண்டித்தனர்.

madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s pressure to improve in academics

ஆசிரியர்கள் கண்டிப்பால் அந்த 7 மாணவிகளும் மனம் உடைந்தார்கள். அப்போது பள்ளி இடைவேளை விடப்பட்டு இருந்த போது பள்ளியின் பின்புறம் சென்ற அவர்கள், முன்னதாகவே தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷமருந்தை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

மாணவிகள், இடைவேளை முடிந்த பின்னும் வகுப்பறைக்கு வராததால் சந்தேகமடைந்த ஆசிரியர் மாணவிகளை தேடினார். அப்போது அவர்கள் பள்ளியின் பின்புறம் மயங்கிக்கிடந்தது தெரியவந்தது.

உடனே அவர்கள் மீட்கப்பட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. மாணவிகள் அனுமதிக்கப்பட்டு உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் உறவினர்கள், கிராம மக்கள் திரண்டதால் அங்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s pressure to improve in academics

Related posts