Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped
நேற்று பெங்களூரில் ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். பெங்களூர் நோக்கி ஹாசனில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்தார்கள்.
மாலை சுமார் 5.15 மணிக்கு யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் சாலையில் பேருந்து வந்தது.
Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped
அப்போது திடீரென்று பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டார். தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல்கொடுத்தனர். தீயணைப்பு படையினர் உடனே 2 வண்டிகளில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
எனினும், அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் எல்லோரும் உயிர் தப்பினார்கள். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேருந்து என்ஜீனில் உண்டான வெப்பம் காரணமாக இந்த தீ விபத்து உண்டாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped
இதையும் படியுங்கள்
- பிலிப்பைன்ஸ் ஹையான் சூறாவளி புயல் : பல லட்சம் மக்கள் வெளியேற்றம்
- திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு
- மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சி
- கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….
- ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.
- இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்
- சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு
← முந்தைய செய்தி: மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சி
அடுத்த செய்தி →: பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசி
