மியான்மர் நாட்டினுடைய அரச வம்சத்தைச்சேர்ந்த கடைசி இளவரசி ஏழையாக குடிசையில் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நாட்டின் கிழக்கில் உள்ள அண்டை நாடான மியான்மரில் (முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது) காலம்காலமாக மன்னர் ஆட்சி நடந்து வந்தது. மியன்மரின் கடைசி மன்னராக இருந்தவர் “திபா”. கடந்த 1885–ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த போது, இவருடைய ஆட்சியையும் அதிகாரமும் பறிக்கப்பட்டது. மியன்மர் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின் ராணுவம் ஆட்சியை கைபற்றியது.
இதனையடுத்து அரச பரம்பரை முற்றிலும் தடைசெய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்து சாதாரண குடி மக்களாக்கப்பட்டனர். அப்படி வந்த கடைசி இளவரசி “ஹிடெக் சு பாயா ஜி”. இவர் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது யங்கூன் நகரில் ஒரு குடிசை வீட்டில் ஏழையாக வறுமையில் வாழ்ந்துவரும் இளவரசிக்கு இப்பொழுது வயது 90.
இளவரசியாக 60 ஆண்டுகளுக்கு முன் மியன்மரில் வலம் வந்த”ஹிடெக் சு பாயா ஜி” இப்பொழுது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கூட யார் என தெரியாமல் வாழ்ந்து வருகிறார். சுமாரான வசதியுடன் வாழ்ந்து வந்த “ஹிடெக் சு பாயா ஜி” ஒரு குடும்ப தகராறில் அவரது பரம்பரை வீட்டை பறிகொடுத்து, இப்பொழுது குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார். தான் வசதியுடன் இளவரசியாக வாழ்ந்த காலத்தையும் இளமைக்கால நினைவுகளுடனும் கழிப்பதாக கூறுகிறார்.
Burma Myanmar former royals lead a ordinary and poor life
Burma Myanmar former royals lead a ordinary and poor life
After many decades of colonialism continued by military rule in Myanmar, The people and Government of Myanmar have forgotten the rule in Burma under last king, Thibaw, whose successors lead a poor lives with the memories of the lost era.