ஓடும் பேருந்தில் தீ! ஆந்திரா மாநில விபத்தில் 30 பயணிகள் சாவு

accident near Nagari : 30 passengers dead in a Bus fire accident near Nagari of Andhra pradesh on the way from Bangalore to Hyderabad

30_latest_bus_fire_1636204g 30_ap_bus_1636103g vbk-30-bus3_1636147g30 passengers dead in a Bus fire accident near Nagari of Andhra pradesh

நகரி :- ஆந்திரா பிரதேசத்தில் உள்ள ‘மெகபூப்’ நகரில் தனியார் பயணிகள் பேருந்து திடீரென தீப்பற்றி கொண்டு எரிந்து விபத்துக்கு உள்ளானதில் 30 பயணிகள் கருகி பலியாகினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திரா பிரதேச தலைநகர் ஹைதராபாத்திற்கு பயணமாகிக்கொண்டிருந்த ஒரு தனியார் பஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மெகபூப் நகர் என்னும் ஊரில், சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் மோதி தீப்பிடித்து எரியத்துவங்கியது.

இந்த தீ விபத்தில் 30 பயணிகள் பரிதாபமாக கருகி பலியானார்கள் என நம்பதகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கருகி மற்றும் சுவற்றின் மேல் மோதியதால் காயம் அடைந்த ஏனைய பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெட்டரு வருகிறார்கள்.

இந்த கோர பேருந்து விபத்து பற்றி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த பகுதி போலீசாருக்கு ஆந்திரா முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

accident near Nagari : 30 passengers dead in a Bus fire accident near Nagari of Andhra pradesh on the way from Bangalore to Hyderabad

Related posts