40 refugees died due to lack of drinking water in Sahara desert near Niger and most of the people dead are children and women
அல்ஜீயஸ் : – ஐரோப்பாவிற்கு பாசம் பிழைக்க போகும் வழியில் சகாரா பாலைவன பகுதியை கடக்கும் போது அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். வறட்சி, வறுமை மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது.
ஆப்பிரிக்க ஏழை நாடுகளான சோமாலியா, எரிக்ட்ரியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் பஞ்சம் பிழைப்பு தேடி ஐரோப்பிய கண்டத்தை நோக்கி வான் மற்றும் கடல் வழியாகவும், முக்கியமாக வாகனங்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக செல்கிறார்கள். இதை பயன்படுத்தி கொள்ளும் கடத்தல்காரர்கள், ஏராளமான பணத்தை வாங்கி கொண்டு மீன் பிடி படகுகள் மற்றும் டிரக்குகளிலும் அளவிற்கு அதிகமாக அகதிகளை ஏற்றி கொண்டு செல்கிறார்கள். இந்த நிலையில் நைஜீரியா நாட்டை சார்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 60 பேர் சில நாட்களுக்கு முன் 2 டிரக் போன்ற வாகனத்தின் மூலம் அல்ஜீரியாவுக்கு அகதிகளாக புறப்பட்டு பயணமானார்கள். மிக பெரிய்ய பாலய்வனமான ‘சகாரா’ பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் நாட்டின் வடக்கு பகுதியான அர்லீப் நகரம் செல்லும் வழியில் சுமார் 50 கி.மீ. தூரத்தில் அகதிகளை ஏற்றி கொண்டு போன ஒரு டிரக் பழுதானது. ட்ரக் பழுதானதால் பாலைவன பகுதில் சிக்கிகொண்ட அகதிகள் நீண்ட தூரம் நடந்து போக இயலவில்லை. குடி தண்ணீர் இல்லாமல் குழந்தைகளும் பெண்களும் நாக்கு உள்பட சுமார் 40 பேர் பலியானார்கள். இதே போல் பாலைவன பகுதிகளில் சிக்கி பல ஆயிரகணக்கான அகதிகள் பலியாகியிருப்பதாக திருக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.