பிறந்ததிலிருந்து கார் டிக்கியில் அடைக்கப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு

Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunk

Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunkCar Mechanics rescued a 2 year old baby girl from a car trunk

பிரான்ஸ் நாட்டில் ஒரு தாய் தனது 2 வயது பெண் குழந்தையை, பிறந்ததில் இருந்து காரின் டிக்கியில் மறைத்து வைத்து வளர்த்து வந்த  சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கார் செம்மை செய்யும் ‘மெக்கானிக்’ ஷெட்டில் ஒரு இளம் வயது பெண்மணி தனது காரை அங்கே நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அவர் விட்டுச்சென்ற வண்டியில் இருந்து சில நாட்களுக்கு பின் குழந்தையினுடைய அழுகுரல் கேட்டதால் அங்கே வேலை செய்யும் ஒரு மெக்கானிக், அந்த காருடைய டிக்கியை திறந்து பரிசோத்தித்த பொது, அதற்குள் ஓர் ஊட்டச்சத்து குறைந்த நிலையில் அழுவதற்கு கூட பலம் இல்லாத ஓர் 2 வயது பெண் குழந்தை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைக்கண்டு அதிர்ந்து போன அந்த மெக்கானிக் உடனடியாக அந்த பெண் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி செய்தார். அந்த குழந்தைக்கு சுயநினைவு இருந்த போதிலும், அது சுகாதாரம் இல்லாத சூழலில், உணவு இன்றி வாடி போய் சோர்ந்து இருந்தது. குழந்தை உடலில் முழுவதும் காயங்களுடனும் வலிமை இல்லாத நிலையில் இருந்ததை கண்ட அந்த இறக்க குணம் கொண்ட ‘மெக்கானிக்’ உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலை கொண்டு காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு செய்த விசாரணையில், அந்த குழந்தையின் தாயே தனக்கு பிறந்த அந்த பெண் குழந்தையை தனது கணவரிடம் இருந்து அதை மறைத்து, அந்த குழந்தை பிறந்தவுடன் அதை தனது காரின் டிக்கியிலேயே அடைத்து வைத்து அதற்கு, அவ்வப்போது உணவு கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த பெண் குழந்தையின் பெற்றவர்கள் மீது குழந்தை முறைகேட்டு செயல் மற்றும் பெற்ற குழந்தை புறக்கணிப்பு எனும்  பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.  இந்த குற்ற செயலுக்கு குழந்தையின் பெற்றோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு என எதிர்பார்க்கப்படுகிறது.

Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunk where it was kept from the birth in a French city. The baby girl’s parents may face a 10 years imprisonment for the child abuse & endangering a minor. 

Related posts