தென் அமெரிக்கவில் மலை உச்சியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 43 பேர் பலி

Guatemala bus crash kills dozens, About 43 people killed and many other injured

Guatemala bus crash kills dozens

 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவின் தலைநகரின் அருகே அமைந்துள்ள சான் மார்டின் ஜிலோட்பெக் எனும் மலைப்பாதை வழியே நிரம்பி வழிந்த பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.  சிமால்டனாங்கோ என்னும் இடத்தில இருந்து சான் மார்டின் ஜிலோட்பெக் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 90 பேர் பயணம் செய்தனர்.

அந்த மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த போது, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஆற்றின் கரையில் விழுந்தது. இதில்3 குழந்தை உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த ஆற்றில் தண்ணீர் மிக வேகமாக சென்று கொண்டிருப்பதால், மீட்புப்பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு, பின்னர் ஆற்றின் கரையில் இருந்தவர்களை ராட்சஷ  கிரேன் கொண்டுவரப்பட்டு  மீட்புப்படையினர் மீட்டனர். விபத்திற்கான முழுமையான  காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

South american country Guatemala bus crash killed 43 people

About 43 people killed and many other injured after a bus plunged off a steep cliff in western Guatemala. Survivors told local media that the accident is due to the overcrowd in bus.

Related posts