130 கிலோ தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு விசா புதுப்பிக்க மறுப்பு

Visa not extended just because of obesity. A South African chef facing threat of deportation from New Zealand due to his weight and has not granted visa extension.

 Visa not extended just because of obesity

உடல் எடை குறைய வேண்டும், குறையாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நியூசிலாந்து அரசு தென் ஆப்பிரிக்கருக்கு 23 மாத இறுதி கெடு விதித்து இருக்கிறது.  இதில் குறிப்பிடத்தக்கது என்னெவென்றால் உலகத்திலேயே நிறைய குண்டான மனிதர்கள் உள்ள நாடு அமெரிக்க, இரண்டாவது மெக்சிகோ, மூன்றாவது  நியூசிலாந்து ஆகும். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் தென் ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவர்,  இவரும் இவருடைய மனைவியும்  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்தில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் குடியேறினர். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது  உடல் எடை மிக அதிகமாக இருந்துவந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியேற்ற துறை அவரது வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, உடல் எடை குறைக்க அறிவுறுத்தி வந்தது.

கடந்த ஆண்டு 120 கிலோவை அவர் எடை தாண்டியது. இதை வன்மையாக கண்டித்த குடியேற்ற அதிகாரிகள், உடல் எடை குறையாவிட்டால் விசா புதுபிக்க உரிமை மறுக்கப்படும் என எச்சரித்தனர். இதற்கு அவர்கள் உதவியும் செய்தனர். நியூசிலாந்தில் உடல் எடை அத்கம் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், அரசு மூலமாகவும், நிதி உதவி அளிப்பது அனைவரும் அறிந்ததே..  இதன் அடிப்படையில்  குடியேற்ற துறை ஆல்பர்ட்டுக்கு பரிந்துரைத்து உதவிகளை நியூலாந்து சுகாதார துறை மூலம் பெட்டரு தந்தது. எனினும் சாப்பட்டு ராமனான ஆல்பர்ட்டால் வாயை கட்டுப் படுத்த  இயலவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால் விசா புதுப்பிக்க மீண்டும் சென்ற போது, அவரது உடல் எடை சுமார் 130 கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டை விட 10 கிலோ எடை அதிகரித்த நிலையில், ஆல்பர்ட்டின் மீது குடியேற்ற துறை தனி கவனம் செலுத்தி விசா புதுப்பிக்க மறுத்து சுகாதார அமைச்சகத்திடம் சான்றிதழ் வாங்கி தர உத்தரவிட்டுள்ளது.

அவர் விஷயத்தில் சுகாதார அமைச்சகம்  மிக கடுமையாக நடந்து கொண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்ற பரிந்துரைத்து  உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவரது வேலை நிமித்த விசா புதுப்பிக்கப்படவில்லை. இதனையடுத்து, அவரது வேலைநிமித்த விசா புதுப்பிக்க முடியவில்லை. அதனால் அவரது மனைவி மார்த்தி நியூசிலாந்து அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தமது கணவருக்கு மேலும் சில மாதங்கள் அவகாசம் தருமாறு வேண்டிகேட்டுகொண்டு அவர் தனது விரைவில் உடல் எடையை குறைத்து விடுவார் என உறுதிகூறியிருந்தார்.  இதனையடுத்து, நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அவருக்கு 23 மாதகாலம் அவகாசம் கொடுத்து அந்த கால அவகாசத்தில் உடல் எடை குறைக்க வேண்டும். மேலும் இந்த 23 மாதங்கள், இதுவரை வழங்கப்பட்ட சுகாதார துறை உதவிகள் ஏதும் கிடையாது. அவரது செலவுகளை அவரே தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் நிக்கி கேயி கூறினார். ஆகையால் ஆல்பர்ட்,  உடல் எடை குறைக்க தினமும் உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு, விரதம் என்று பல முயற்சியில் இறங்கியுள்ளார்.

English Summary:

Visa not extended just because of obesity

A South African chef facing threat of deportation from New Zealand due to his weight and has not granted visa extension.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial, Residential and Commercial property for sale in Chennai

Related posts