திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy

திருச்சி அருகில் 105 வயதுடைய இலங்கை பூர்விகமாக கொண்ட மூதாட்டி ஒருவரை 10 பவுன் தங்க நகையை களவாட கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy

திருச்சியை அடுத்து உள்ள மாத்தூர் அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமதி.பெரியநாயகி. இவருக்கு வயது 105. இவர் இலங்கையை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் இந்தியாவில் குடியேறிவிட்டார். இவருடைய கணவவரும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உண்டு. இதில் 3 பிள்ளைகள் இலங்கையிலேயே இறந்துவிட்டனர். மற்ற அனைவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மூதாட்டி பெரியநாயகி வீட்டில் தனியாக தான் இருந்து வந்தார்.

தனது மகன்கள் அனுப்பும் பணத்தை வைத்து தானாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். மகன்கள் இருவரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கோவையில் இருந்து வந்து தாயாரை பார்த்து விட்டு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் வந்திருந்த அவர்கள் பின்னர் கோவைக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் மூதாட்டி பெரிய நாயகி தனியாக வசித்து வருவதையும், அவர் தனது காதில் மிகவும் அரிதான பழமையான பாம்படம் என்னும் நகையும், தங்க மூக்குத்தியும், கழுத்தில் செயின் அணிந்திருந்ததையும் மர்ம நபர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.

நேற்று இரவு எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு பெரியநாகி தூங்க சென்றார். நள்ளிரவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து கதவை திறந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பெரியநாகியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy  

பின்னர் அவரது காதை ஈவு இரக்கமின்றி அறுத்த கொள்ளையர்கள் பாம்படம், தங்க முக்குத்தி, மற்றும் தங்க சங்கிலியையும், கொள்ளையடித்து விட்டு தப்பித்தார்கள். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும்.

இது பற்றி மாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோப்பு பவுடர் விற்பனை செய்ய வந்த 3 பேர் பெரியநாகியிடம் பேச்சுகொடுத்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக பெரியநாயகியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy

Related posts