ஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who crossed the raiway track

ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்வதும், அவர்களை பிடித்து ஆர்பிஎஃப்  ரெயில்வே கோர்ட்டி முன் நிறுத்துவதும் அன்றாடம் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். எனினும் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி ரெயில் நிலையத்தில் வித்தியாசமான காரசாரமான விஷயம் நடந்தது. ரெயில்வே பிளாட்பாரத்தில் ஓர் இளம் பெண் ஆர்.பி.எஃப். அதிகாரி ஒருவரை தன் மேல் கை வைத்தால் தான் அறைந்து விடுவேன் என பொதுமக்கள் முன் மிரட்டியதை அனைவரும் பார்த்தனர். ரெயில்வே போலீஸ் அதிகாரி இத்தனைக்கும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார் அவ்வளவு தான். எனினும் அதற்குள்ளாகவே அந்தப் பெண், ஆர்.பி. எப் அதிகாரியை கடுமையாக மிரட்டி எதிர் கொண்டது ரெயில் நிலையத்தில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக இந்தி சானல் தனது செய்தித் தொகுப்பில் கூறியுள்ளது.
நடந்தது என்ன ?. : டிவிஷனல் ரெயில்வே மேலாளர் கஜானன் மல்லைய்யா நேரடியாக டிக்கெட் இல்லாத ஓசி பயணிகளை பிடிக்க ரான்சி ரயில் நிலயத்திற்கு வந்துள்ளார். டிக்கெட் பரிசோதனை ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு பெண் விறுவிறுவென செக்கிங்கை கடந்து சென்றுள்ளார். அப்போது ரெயில்வே போலீஸ் அதிகாரி யாதவ் அவரை இடைமறித்துள்ளார். டிக்கெட்டை எடு என்று கூறியுள்ளார். கடுப்பான அந்தப் பெண் தான் ஒரு ரெயில்வே ஊழியரின் உறவினர் என்றும் தொடர்ந்து தன்னை அங்கு நிறுத்திவைக்க முயற்சி செய்தால் அறைந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதிர்ந்து போன யாதவ் அந்தப் பெண்ணை விட்டுவிட்டார். ஆனால் விஷயம் அத்தோடு முடியவில்லை. தனக்கு நேர்ந்ததை டிவிஷனல் மேனேஜரிடம் யாதவ் கூற அவர் இரண்டு பெண் போலீசை அனுப்பி யார் அந்தப் பெண் என்று பார்க்கக்கூறியுள்ளார். அப்போதுதான் அந்த தைரியசாலிப் பெண் ரயில்வே காலனி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு சற்று அருகே இரன்டு பெண் போலீசும் அந்தப் பெண்ணை பிடித்து மீண்டும் ரெயில்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அந்தப் பெண் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளது தெரியவந்தது இதனையடுத்து அதிகாரியை வசைபாடியதற்கு ஒரு மன்னிப்பு கடிதமும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக 255 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

English Summary :

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket

Ranchi: During the course of checking in Ranchi raiway station, a lady was seen threatening a senior officer of the RPF to slap him in front of the public. She was heard saying that she will the officer if he dares to touch her’’ Witnesses said that the police officer had not even touched or make any attempt to touch the lady. The lady was just stopped by him in the event of absence of any female official for checking on the females present at the station.

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket

Related posts