புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் என்.எச்.எஸ்.ஆர்.சி, குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம்

டெல்லி :இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு 508 கி.மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். நிலம் கையகப்படுத்தல் சட்டவிரோதமானது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.அதிவேக புல்லட் ரயில் சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் 2023 க்குள் முடிக்கப்பட உள்ளது.மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எச்.எஸ்.ஆர்.சி) மற்றும் குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Related posts