சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி -சாகேத் நீதிமன்றம்

டெல்லி :முஜாபர்பூர் தங்குமிடம் வழக்கில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜேஷ் தாக்கூர் மற்றும் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.இந்த வழக்கு சாகேத் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி சவுரப் குல்ஷ்ரேஷ்டா முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சவுரப் குல்ஷ்ரேஷ்டா, பிரஜேஷ் தாக்கூர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.

போக்ஸோ சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரம், குற்றவியல் சதி, மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் போன்ற பல காரணங்களுக்காக பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்ட சில பெண்கள் குற்றவியல் சதி, குற்றத்தைத் தூண்டுதல், போக்ஸோ சட்டத்தின் 12 வது பிரிவு மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts