பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு

கேரளா:பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்ட்லேஜே ட்வீட் தொடர்பாக கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.உடுப்பி-சியாகமகளூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. கரண்ட்லேஜே புதன்கிழமை ட்வீட் செய்திருந்தார்.அந்த டீவீட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஐ ஆதரித்தற்காக மலப்புரம் மாவட்டத்தின் குட்டிபுரம் பஞ்சாயத்தின் இந்துக்களுக்கு நீர் மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இது தவறான பதிவு என்று கூறி, ஒரு வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரில் நீர் பற்றாக்குறை தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

Related posts