பத்திரப்பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி:பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 32 படி, பத்திரப்பதிவு செய்யும் நேரத்தில் இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் மாநிலங்கள் வகுத்த விதிகளின்படி பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவைப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த வழக்கில், விற்பனை பத்திரத்தை பதிவு செய்யும் நேரத்தில் வாங்குபவர் இல்லை என்று மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 32 படி, பதிவு செய்யும் நேரத்தில் இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை என்று தெரிவித்தனர்.

Related posts