கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு!

கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு! சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் 31 பேர் வேலை பார்த்து வந்தனர் .அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியானம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனமக்கள் ஆவார்கள்.இவர்கள் ஜெயபால் என்பவரிடம் ஒரு குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை பார்க்க வந்துள்ளனர். 3 ஆண்டுக்கும் மேலாக பெற்ற பணத்திற்காக கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்ததால் இது சம்மந்தமாக செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு 31 பேரையும் மீட்டு ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் 31 பேர் வேலை பார்த்து வந்தனர் .அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியானம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனமக்கள் ஆவார்கள்.இவர்கள் ஜெயபால் என்பவரிடம் ஒரு குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை பார்க்க வந்துள்ளனர்.

3 ஆண்டுக்கும் மேலாக பெற்ற பணத்திற்காக கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்ததால் இது சம்மந்தமாக செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு 31 பேரையும் மீட்டு ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts