ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு பஸ் நிலையத்தில் இரண்டு நாள் முன்பு குண்டு வீசியதில் இரண்டு பேர் பலியானார்கள் மற்றும் 32 பேர் காயம் அடைந்தனர். இது சம்மந்தமாக ஒருவனை போலீசார் கைது செய்தனர் .அவனை விசாரித்தபோது அவன் கூறியது “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்த வெடிகுண்டை ஜம்மு பஸ் நிலையத்தில் வீசினால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் நான் வீசினேன்”என்று கூறினான்.
இந்த சிறுவனிடம் வெடிகுண்டை வழங்கியது ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி முசாமில் என்பது தெரிந்தவுடன் அவனையும் போலீசார் கைது செய்தனர் . அவனை விசாரித்தபோது இவன் கூறுகையில் “குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பயாஸ் என்னிடம் வெடிகுண்டை கொடுத்து மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் எறியும்படி கூறினான். ஆனால் எனக்கு பயமாக இருந்ததால் வெடிகுண்டை சிறுவனிடம் கொடுத்து எறியும்படி கூறினேன். ” என்று பயங்கரவாதி முசாமில் தெரிவித்தான்.