சென்னை:திருப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர் முறையான அனுமதியும் இல்லாமல் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.பிறகு அந்த 6 பேரையும் வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து உறுதி செய்தனர் . அவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியுள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் பற்றியும் குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
- ஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைது
- கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு!
- உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்பு
அடுத்த செய்தி →: ஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைது

