புதுடெல்லி:ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆர்.சி. புத்தகத்தை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த கார்டுகளை பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்த கார்டுகளை தரமாக தயாரித்து கொள்ளும்படி மாநில அரசுக்கு கூறியுள்ளது.