Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding
இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் திகிலடைந்து விட்டன்ர். அதோடு கேக்கின் அருகில், ‘மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தனர் இந்த வித்தியாசமான தம்பதியர். இந்தக் கேக்கில் மற்றொரு விஷேஷம் என்னவென்றால், இது மணப்பெண் நதாலேயே கைப்பட தயாரித்தது ஆகும்.
அந்த கலையில் வல்லுனரான நதாலே, சுமார் 40 மணிநேரம் செலவிட்டு அதை வெண்ணிலா, சாக்லெட் சுவையில் பட்டர்கிரீம் கொண்டு தயாரித்துள்ளார். மணமக்கள் மற்றும் விருந்தினர்களை இந்த கேக் கவர்ந்தாலும் அவருடைய பாட்டிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். இந்த வித்தியாச கேக் தயாரிக்கும் யோசனை ஏற்பட்டது குறித்து நதாலே கூறும்போது, ‘கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர ரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தோம். இது அனைவரையும் வியக்க வைத்தது உண்மை’ எனத் தெரிவித்துள்ளார்.
Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding
Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding
Every couple dreams of having a killer wedding. These two set their sights on a killer wedding cake. Texas newlyweds David and Natalie Sideserf decided to take the phrase “Till death do us part” to a whole new level by crafting a custom cake to give the line its due. The result was a hyperrealistic cake depicting both of their heads, severed and bleeding on the floor. Their glazed-over, lifeless eyes stare both into the afterlife and at wedding attendees.
Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding