சென்னை: 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் . இதற்கு காரணம் திருமணத்தை மீறிய உறவுகள் தான். இது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தான் காரணமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள், டிவி சிரீயல்கள், திரைப்படங்களில் காட்சிகள் பற்றியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் காரணமாக திருமணத்துக்கு மீறிய உறவுகளை கணவனோ, மனைவியோ வைத்துக்கொள்கிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜூன் 21ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.