திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!

திருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர்.

அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு அப்பவே விவாகரத்து பெற்றுவிட்டு சென்றனர்.

விவகாரத்து பின்னரும் பரிமாறப்பட்ட உணவுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள் .கடைசி வரை அவர்களுக்குள் என்ன சண்டை என்றே தெரியவில்லை என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்கள்

Related posts