குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers

இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க மாட்டேன் என்றும், குட்கா உட்கொள்ளமட்டேன் என்றும் உறுதிமொழியை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான அரசாணையை எல்லா அரசுத்துறைகள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கபட்டிருக்கிறது. அது மட்டுமில்லாது அந்த மாநில ஆளுநருக்கும் இந்த ஆணையின் நகலை அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது.

இந்த உத்தரவை இராஜஸ்தான் மாநில அரசாங்க பணியாளர் தேர்வாணையம் செயல் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகையிலை கட்டுப்பாட்டு குழு தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒரு நல்ல புதிய யோசனையை அரசுக்கு அளித்தது. இந்த உத்தரவின் மூலம் அமலுக்கு வந்தால் இளைஞர்களிடையே ஆரம்ப நிலையில் இருக்கும் இந்த புகைபிடிக்கும் மற்றும் குட்கா உட்கொள்ளும் பழக்கத்தை கட்டுப்படுத்த இயலும் என்பது தான் அதன் முதல் நோக்கம்.

இது சம்பந்தமாக கருத்து கூறிய புகையிலை கட்டுப்பாட்டு குழு அதிகாரி சுனில் சிங், இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகத்திலேயே இந்த உத்தரவு முதல் முறையாக இராஜஸ்தானில் தான் எடுக்கப்பட்டுள்ளது என்றார். எனினும் திருட்டுத்தனமாகஎவருக்கும் தெரியாமல் புகை பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. இந்த கேள்விக்கும் சுனில் சிங் பதில் அளிக்கையில் .. அப்படி இந்த விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனை பற்றிய விவரத்தை புகையிலை கட்டுப்பாட்டுக் குழுவினுடைய அடுத்து வரும் கூட்டத்தில் ஆலோசனை செய்து அரசுக்கு பரிந்துரைப்போம் என்று கூறினார்.

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers

Quit tobacco if you want a govt job in Rajasthan

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers. The Congress Government have issued a circular to all government departments and district collectors to extract an undertaking from job seeking candidates to the effect that while in government service they will not smoke or consume gutka

Related posts