குளிர்சாதன பெட்டியினுள் ஒளிந்து விளையாடிய 3 சிறுவர்கள் பலி

South African children suffocate inside old refrigerator

 South African children suffocate inside old refrigerator

 தென்னாபிரிக்காவின் வட மேற்கு மாகாண அடமேலாங் நகரில் 3 சிறுவர்கள் கைவிடப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

நான்கு வயதான இருவர், மூன்று வயது ஒருவர் என விவரம் தெரியாத அந்த சிறுவர்கள் உள்ளே ஒளிந்திருந்தபோது அந்த குளிர்சாதனப்பெட்டி மூடிக்கொண்டது.

பின்னர் அந்த மூன்று சிறுவர்களாலும் அப்பெட்டியிலிருந்து வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறி உள்ளேய இறந்து கிடந்தனர்.

இந்நிலையில் அந்த சிறுவர்களை காணாது பெற்றோர்கள் தேடி அலைந்தனர். இறுதியில் சிறுவர்களின் உறவினரான ஒரு மூதாட்டி அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவர்களின் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பாவி சிறுவர்கள் இறந்துபோனது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை வரவழைத்துள்ளது.

South African children suffocate inside old refrigerator

Three South African children were found dead by a grandparent after becoming stuck in an abandoned refrigerator as they played near their home, police said on Saturday. Their bodies were found Friday in Atamelang, a town in the country’s North West province, police spokesman Sergeant Kealeboga Molale said. Two of the victims were four years old and the other was just three. “They go into the refrigerator and it looks like the refrigerator locks itself and they suffocated,” Molale said. “They were playing outside… and that’s how they went into it and died, the three of them. Two were four years old and one (was) three,” he added. The grandfather of at least one of the children apparently found their bodies after they failed to return home and called the police. An enquiry has been opened into the deaths.

Related posts