தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கு: மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாலியல் வழக்கு மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் செய்தார்.போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு 1.5 கோடி வரை பணம் தருவதாக கூறியதை வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தெரிவித்தார்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது ஆதாரங்கள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கவோ , சேதப்படுத்தவோ இடம் தந்துவிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையின் முடிவில் வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும்,அவற்றை இணைத்து கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார் . அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.அதை டைப் செய்ய வேண்டாம் என்றும் ,தகவல்கள் கசியாமல் இருக்க கைப்பட எழுதி தாக்கல் செய்ய நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் செய்தார்.போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு 1.5 கோடி வரை பணம் தருவதாக கூறியதை வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தெரிவித்தார்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது ஆதாரங்கள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கவோ , சேதப்படுத்தவோ இடம் தந்துவிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையின் முடிவில் வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும்,அவற்றை இணைத்து கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார் . அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.அதை டைப் செய்ய வேண்டாம் என்றும் ,தகவல்கள் கசியாமல் இருக்க கைப்பட எழுதி தாக்கல் செய்ய நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts