தலைக்கவசம் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

Action against Traffic sub-inspectors who do not impose spot fines and compound offences of not wearing Helmet 

சென்னையில், தலைக்கவசம் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கட்டாய தலைக்கவச சட்டம்

கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரும் வழக்கில், இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் காயமுற்று உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு ஏற்கெனவே ஆணையிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை எனில், 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல் உதவி ஆய்வாளர்கள் வேலையில் மெத்தனம்

கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் வேலை செய்யாமல் சாலையோரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில், விபத்தில் சிக்கிய 2 காவலர்கள் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டுமென்றும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

News in English:

Action against Traffic sub-inspectors who do not impose spot fines and compound offences of not wearing Helmet

The Madras High Court today noted that despite its orders, a majority of pillion riders were not wearing helmets and directed the Tamil Nadu Home Secretary, DGP, police commissioners and SPs to ensure effective implementation of the order.

“Though this court has passed orders periodically, judicial notice can be taken that many of the pillion riders are not wearing helmets,” a bench of Justices S Manikumar and Subramonium Prasad said.

The court had passed the interim orders on a PIL filed by KK Rajendran seeking implementation of the helmet rule.

The bench warned that it would be constrained to take action against sub-inspectors of police and others if there was failure on their part to enforce the provisions of the Motor Vehicles Act.

The bench further said, “If supervision is inadequate, then, this court would be constrained to issue appropriate orders against the Heads of the Department.”

It posted the matter for further hearing to July 5.

It also noted that the government had not issued any order in pursuance of its June 12 order directing all police officers not below the rank of sub-inspector in addition to traffic sub-inspectors be empowered to impose spot fines and compound offences committed under the Motor Vehicles Act.

Related posts