உச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை

உச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை புதுடெல்லி:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

புதுடெல்லி:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

Related posts