சென்னை:கரூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜியுடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது இரவு 12 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி கைது செய்யப்படாமல் இருக்க வழக்கறிஞர் செந்தில்குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ,வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன் ஜாமீன் வழக்கினார்.