Boy Kills Granny After Playing video Game
8 Year Old Boy Kills Granny After Playing video Game
அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்துள்ளான். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மேரி ஸ்மாதர்ஸ்(87). அவர் தனது 8 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த சிறுவன் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV என்ற வீடியோ கேமை விளையாடி உள்ளான். அதன் பிறகு அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பாட்டிக்கு பின்னால் வந்து நின்றுள்ளான். வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் தனது பாட்டியின் தலையில் சுட்டான். இதில் மேரி தலையில் குண்டடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். விசாரணையில் சிறுவன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஏதேச்சையாக வெளிவந்ததாக முதலில் தெரிவித்தான். ஆனால் மேலும் விசாரணை நடத்தியதில் சிறுவன் வேண்டும் என்றே சுட்டது தெரிய வந்தது. லூசியானா சட்டப்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குற்றத்திற்கான தண்டனையில் இருந்து விதிவிலக்கு உள்ளது. அதனால் சிறுவன் மீது எந்த குற்றமும் சுமத்தப்படாது.
8 Year Old Boy Kills Granny After Playing video Game
Boy Kills Granny After Playing video Game
A 8-year old Lousiana boy shot his 87-year old grandmother while she was watching television. He did this after playing Grand Theft Auto IV video game.
Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai