மொட்டை மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி

13 year old boy fell from terrace and dead while when playing with his dog

13 year old boy fell from terrace and dead while when playing with his dog

சென்னை ராயபுரம்: தான் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் மொட்டை மாடியில் விளை யாடிக் கொண்டிருந்த சிறுவன், தவறி விழுந்து இறந்தான்.  இந்த சம்பவம் ராயபுரத்தில் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் பிரேம் சாய் (வயது13) ராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன். பிரேம் சாய் ராயபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றின் 8ம் வகுப்பு படித்து வந்தான்.  தான் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் நேற்று முன் தினம் மாலை வீட்டின் மொட்டை மாடியில், விளை யாடிக் கொண்டிருந்தான் பிரேம் சாய். விளையாடி கொண்டிருந்த போது திடிரென்று கால்தவறி தடுமாறி மொட்டை மாடி யில் இருந்து தவறி விழுந்தான்.  இதில் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பிரேம் சாய் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவத்தின் பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதே ராயபுரம் பகுதியில் சுமார் 10 நாட்களுக்கு முன்னால் வளர்ப்பு நாயுடன் விளையாடிய ஒரு வாலிபர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

13 year old boy fell from terrace and dead while when playing with his dog

Related posts