சென்னையில் மகளின் கழுத்தை முறித்து கொன்று தந்தை தற்கொலை

transport corporation mechanic kills daughter and self

Subramani
சுப்பிரமணி (வயது 46)

transport corporation mechanic kills daughter and self

சென்னை எல்டாம்ஸ் சாலை சின்னத்தம்பித் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 46). அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில்பிரிவில் பணிபுர்ந்து வந்தார்.

இவருக்கு மனைவியும், மகள் மற்றும் மகனும் உண்டு.

நேற்று காலை இவரது மனைவி சுஜாதா,  10 வயது மனுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் சுப்பிரமணியும் , மகள் ஷர்மிளாவும்  (வயது 16) இருந்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய சுஜாதா, வீட்டில் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்து விட்டது.

வீட்டில் மகள் சுஜாதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கணவனோ அறையில், தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட சுஜாதா கதறி  அழுதார். இவரது கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளோர் அனைவரும் வீட்டின் முன்னே கூடி விட்டனர்.

இது குறித்து, தகவல் கிடைக்கப்பெற்ற திருவல்லிக்கேணி காவல்நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, உடல்களைக் கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையில், சுப்பிரமணி கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது பற்றி, சுப்பிரமணியின் ம்னைவி சுஜாதாவிட்ம் விசாரித்த போது,  “மாலை 4 மணி அளவில் கைப்பேசியில் மகளுடன் பேசியதாகவும் 8 மணி அளவில் பேசுவதற்கு முயன்ற போது, பேச இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார். எனவே இதற்கிடையில் தான், சம்பவம் நடைபெற்று  இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக வீட்டில் சோதனை நடத்திய காவலர்கள், சுப்பிரமணியால் எழுதப்பட்ட கடிதத்தை கைபற்றியுள்ளனர். அக்கடிதத்தில், கடன் தொல்லை அதிகமானதின் காரணமாக இரவில் தூக்கமின்றி தவித்து வந்ததால், தற்கொலை செய்யும் முடிவு எடுத்து விட்டேன்  என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் , அக்கடிதத்தில் ஆசையோடு வளர்த்த மகள் அவரது மரணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு விடக் கூடாது என்ப்தால், மகளை கொன்று விட்டதாக அக்கடித்தத்தில் சுப்பிரமணி எழுதியிருக்கிறார்.

மகளைக் கொன்று விட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

transport corporation mechanic kills daughter and self

A transport corporation mechanic killed his daughter and committed suicide in Chennai.

Related posts