போர்க்கப்பல் விக்ராந்த் இந்திய கடற்படைத்தளத்தில்

INS Vikrant, India 1st indigenous aircraft carrier launched

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது.

260 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பலின் எடை 37 ஆயிரத்து 500 டன் ஆகும். இந்த கப்பலின் 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும் பிற கட்டுமான பணிகளுக்காக ஐ.என்.எஸ். விக்ரந்த் அந்த தளத்தில் இருந்து வேறு தளத்திற்கு மாற்றப்படுகிறது. இதன் தொடக்க விழா கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று தொடங்கியது.

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அ மைச்சர் ஜி.கே.வாசன், கப்பற்படை தலைவர் அட்மிரல் டி.கே.ஜோஷி உள்ளிட்டோரும் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஜூன் 2014ம் ஆண்டு வரை இந்தக் கப்பல் அதன் உள்பகுதி முழுமையாக்கலுக்காக கட்டுமானப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டு, 2016ம் ஆண்டில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு, 2018ம் ஆண்டில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் சுயமாக பெரிய அளவிலான விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வடிவமைத்து தயாரிக்கும் திறன் பெற்று உள்ளன. அந்த பட்டியலில் இப்போது புதிதாக இந்தியாவும் சேர்ந்து இருக்கிறது.

36 விமானங்களைச் சுமந்து செல்லும் திறன் பெற்றது.

* கொச்சின் கப்பல் கட்டுமானக் கழகத்தின் வடிவமைப்பில், கடற்படைக் கப்பல் இயக்குநரகத்தால் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. இது 260 மீற்றர் நீளமும், 60 மீற்றர் அகலமும் கொண்டிருக்கும்.

* ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தாலும் அளிக்கப்பட்ட உயர் ரக ஸ்டீல் பொருள்களைக் கொண்டு, பாதுகாப்பு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் இதன் 90 சதவிகித உள் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இதன் உள்கட்டுமானப் பிரிவில் 90% பொருள்கள், மிதவை பண்பு கொண்டது, 60% நகரும் பொருள்களுடனும், 30% விமான பறக்கும் பிரிவிலும் அடங்கும். இதன் பாதிக்கும் மேற்பட்ட பொருள்கள் ரஷ்யாவில் இருந்து வரவழைக்கப்பட்டாலும், ஸ்டீல் பொருள்களும் முழுமையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.

* 2016ம் ஆண்டில் இதன் இயக்கம் தொடங்கப்படும் என்றாலும், 2017ம் ஆண்டில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, போர்க் கப்பல்களுடன் 2018ம் ஆண்டில் கடற்படையில் இயக்க அனுமதிக்கப்படும்.

INS Vikrant, India 1st indigenous aircraft carrier launched

INS Vikrant – India’s new giant in the seas

வீடியோ இணைப்பு  

Related posts