The last nuclear reactor closed down in Japan
டோக்கியோ: ஜப்பானில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. எனினும் ஜப்பானில் அணுசக்திக்கு பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் இந்த உலை மீண்டும் திறக்கப்படுவது உறுதி இல்லை என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் அணு கதிர் வீச்சு ஏற்பட்டது. இதனால் பெரும் பெரும் பீதியும் பாதிப்பும் ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக ஜப்பான் மக்கள் அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உடனடியாக அவைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தால் ஜப்பானில் உள்ள அணு உலைகளை மூடுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளை ஜப்பான் அரசாங்கம் ஆரம்பித்தது. ஜப்பானில் சுமார் 50-க்கு அதிகமான அணு மின் உலைகள் முழுவீச்சில் இயங்கி கொண்டிருந்தன. படிப்படியாக பெரும்பாலான அணுமின் உலைகள் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மூடப்பட்டு வந்தன. இதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் உலையும் மூடப்பட்டது.
ஆகையால் ஜப்பானில் இயங்கி வந்த இந்த கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது. இது கடந்த 40 ஆண்டு கால உலக வரலாற்றில் அணுமின் உற்பத்தி முழுமையாக நின்று போனது இது முதல் முறையாகும்.
English summary:
The last nuclear reactor closed down in Japan
After Thirty months of the Fukushima nuclear disaster, Japan decided to close down the last Nuclear station. It has become at least temporarily a ‘nuclear power free country’ by shutting down the last of their 50 atomic Nuclear reactors.