தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை??.

Back to power shortage

Back to power shortage

அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின்நிலையல் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 5அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் இயந்திர பழுது, பாய்லர் பழுதுகளால் அவ்வப்போது மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் 1,200 மெகாவாட் வரை மின் தேவை கூடியுள்ளது. மேலும் காற்றாலையும் திடீரென கைவிட்டதால் 3 மாதத்துக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார தடை மீண்டும் அமலாகி உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 12,500 முதல் 13,000 மெகாவாட் ஆக உள்ளது. சுமார் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை இருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால், வெப்பத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மின்தேவையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது.

கிராமப்புறங்களில் 5 மணி நேரமும், நகர்ப்புறங்களில் 3 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 284 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது. இந்நிலையில், தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 1வது யூனிட்டில் நேற்று காலை பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதை பற்றி  மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு காற்றாலையில் கிடைக்கும் மின்சார அளவு குறைந்துள்ளது. வல்லூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பழுதாகியுள்ள அனைத்து யூனிட்டுகளும் செயல்பட தொடங்கும். மேலும், மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் துணை மின்நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்களில் பராமரிப்பு பணிகளும் நடந்து வருவதால் மின்தடை செய்யப்படுகிறது. 2 புதிய யூனிட்களிலும் விரைவில் உற்பத்தி தொடங்கவுள்ளது என்று கூரினர் .

Back to power shortage

Back to power shortage all over Tamil nadu including chennai soon. This going to happen with in few days since few plants in Tutucorin are in Trouble but it can be rectified.

Related posts