இன்று அம்மா குடிதண்ணீர் பாட்டில் அறிமுகம் ஒரு லிட்டர் பத்து ரூபாய்!

Jayalalitha to launch scheme to provide mineral water at ten rupees

Jayalalitha to launch scheme to provide mineral water at ten rupees

அரசு பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பத்து ரூபாய்க்கு அம்மா குடிதண்ணீர் வழங்கும் திட்டம் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் சென்னை கோட்டையில் காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.

இது சம்பந்தமாக தமிழக அரசு வெளியீடு செய்துள்ள செய்தி குறிப்பினில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கபட்டது. அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா 21.6.2013 அன்று அறிவித்தார். இதன் முதல் நிலையாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிதண்ணீர் உற்பத்தி நிலையம் அமைக்கபட்டிருக்கிறது. இந்த குடிதண்ணீர் உற்பத்தி திறன் நாள் ஒன்றிற்கு சுமார் 3லட்சம் லிட்டராகும். இங்கே உற்பத்தியாகும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் அரசு பேருந்துகளிலும், சென்னையிலுள்ள பேருந்து நிலையங்களிலும், ஏனைய மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் 1 லட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். தனியார் நிறுவனங்கள் 20 ரூபாய்க்கும் ரயில்வே நிர்வாகம் 15ரூபாய்க்கும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்கிறார்கள். இந்நிலையில் அம்மா குடிதண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக அமையும். இந்த திட்டம் மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் உடனடியாக செயல்பட துவங்கும். மேலும் 9 இடங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அம்மா குடிதண்ணீர் விற்பனை துவக்கத்தின் அடையாளமாக 7 பயணிகளுக்கு அம்மா குடிதண்ணீர் பாட்டில்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிராஜ் கிஷோர் பிரசாத், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ரங்கராஜ் மேலும் பல அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Jayalalitha to launch scheme to provide mineral water at ten rupees

 In yet another pro-people welfare measure, Tamil Nadu Chief Minister Jayalalithaa will launch a scheme tomorrow to provide mineral water for Rs ten a litre. The Chief Minister will inaugurate the “Amma Drinking Water” plant at Gummidipoondy in nearby Tiruvallur district, the government said today. “Amma Drinking Water will be sold in all long-distance government buses and bus stands in Chennai and other districts,” it said. The launch coincides with the 105th birth anniversary of Dravidian veteran, the late Chief Minister CN Annadurai. Jayalalithaa had announced the project in June this year to ensure quality and affordable drinking water to the poor and middle class. She had said production units will be established by state transport corporations which would make available one litre of mineral water packed in bottles at Rs 10 each, ensuring safe water and reducing to some extent the financial burden of the people. She said the transport corporations would sell a litre of bottled water at Rs 10 This was against Rs 15 charged by the Railways and Rs 20 by private players for bottled water. Nine more water production units would be established across the state, she had said then. The mineral water initiative is one of the many pro-poor measures taken by the AIADMK government to provide relief to the people reeling under the spiralling price rise. ‘Amma canteens’ that serve breakfast, lunch and dinner at subsidized rates and vending outlets selling vegetables at subsidized prices are some pro-people welfare measures already launched by the government. The government is already providing rice free to ration card holders. The water will be available in a plastic bottle with the engraved word “Amma”

Related posts