அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி வழங்க கோரி இந்திய மாணவர் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது

Supreme court of India

டெல்லி: இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் உலகளாவிய இலவச தடுப்பூசி வழங்குவதற்கான உத்தரவை வழங்கவும் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரியை தள்ளுபடி செய்யவும் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எஃப்.ஐ) உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

காப்புரிமை சட்டம், 1970 யின் படி கட்டாய உரிமங்களை வழங்கவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் இறக்குமதி மீதான பொருட்கள் மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கவும் மத்திய அரசு மற்றும் அதன் முகவர் நிறுவனங்களுக்கு ஒரு விண்ணப்பத்தின் மூலம் கூட்டமைப்பு கோரியுள்ளது.

Related posts